மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு... வன்முறை நடந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படை

மணிப்பூரில் தொடர்ந்து நீடித்துவரும் வன்முறைக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
உக்ருல் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் தோவாய் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மூவரை மற்றொரு தரப்பினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளது.
இதனிடையே ஆளும் பாஜகவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 10 குக்கி இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், மலைப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவம் மற்றும் பிற பொருட்கள் மெய்தே சமூகத்தால் தொடர்ந்து தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
Comments