ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளைஞரின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்றதாக அவரது உறவினரை கைது செய்த போலீஸ்

0 1275

திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூர் வரை செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளைஞரின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்றதாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

சத்தீஸ்கரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் ஈரோட்டில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வந்துள்ளனர். பிரகாஷ்க்கு சில நாட்களாக மனநல பாதிப்பு ஏற்பட்டதால் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக ராம்குமாரும், 15 வயது சிறுவனும் அவரை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.

ரயிலில் பிரகாஷ் பயங்கரமாக சத்தமிட்டு, பயணிகளுக்கு தொந்தரவு செய்ததால் ராம்குமாரும், சிறுவனும் சேர்ந்து பிரகாஷின் கை,கால்களை கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மேலும் அதிகமாக சத்தமிட்டதால், கழுத்தை துணியால் கட்டி இருக்கையில் உள்ள கம்பியில் கட்டி படுக்க வைத்தநிலையில் பிரகாஷ்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி சிறுவனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments