சந்திரயான்-3 விண்கலத்தின் தூரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது..!

0 2671

நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணித்துவரும் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவை குறைக்கும் இறுதி கட்ட முயற்சியை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் உந்தித்தள்ளப்பட்டது. தொடர்ந்து கடந்த 7, 9, 14 ஆகிய தேதிகளில், சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதையின் தொலைவு 3 கட்டங்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நான்காவது மற்றும் இறுதிக்கட்டடமாக விண்கலத்தின் நிலவு சுற்றுப்பாதை உயரம்  இன்று காலை 8.30 மணிக்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவியை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments