டி.ஜி.பி அலுவலகம் முன்பு தலைமைக் காவலர் கையில் தேசியக் கொடி ஏந்தி மகளுடன் தர்ணா

0 1631

சென்னையில் டி.ஜி.பி அலுவலகம் முன்பு காவலர் ஒருவர் தனது 10 வயது மகளுடன் கையில் தேசியக் கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர், ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணி.

இவரது மகள் பிரதிக்ஷா சிறுநீரக பிரச்சனை காரணமாக எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அவரது வலது கால் பாதம் கருகியதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தலைமை காவலர், சுதந்திர தினத்தை முன்னிட்டு டி.ஜி.பி அலுவலகம் முன்பு மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments