நாடு முழுவதும் 77வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சென்னையில் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

0 942

 

உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா, சிஎஸ்எஃப்ஐ படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பெரம்பூரில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் தென் மண்டல இயக்குநர் உமா சங்கர் தேசியக் கொடியேற்றினார்.

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள ஜி.எஸ்.டி தலைமை அலுவலகத்தில் முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தேசிய கொடியேற்றினார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் பிரியா தேசியக் கொடியை ஏற்றினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார்தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments