திருப்பதி மலைப்பாதையில் சிறுமியைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது

0 3547

 திருமலை திருப்பதி மலையேற்ற நடைபாதையில் பக்தர்களை தாக்கி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

அலிபிரி மலைப்பாதையில் கடந்த ஜூன் மாதம் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்ற நிலையில், காயங்களுடன் சிறுவன் மீட்கப்பட்டான்.

இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

இதனையடுத்து சிறுத்தையைப் பிடிக்க தேவஸ்தானம் மற்றும் வனத்துறை சார்பில் 3 கூண்டுகளை அமைத்தனர்.

இந்த கூண்டுகளில் ஒன்றில் அதிகாலை சிறுத்தை ஒன்று பிடிபட்டது. அதனை பத்திரமாக வேறொரு பகுதியில் சென்று விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments