தற்போதைய மூத்த அமைச்சர் ஒருவர்தான் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தார் -எடப்பாடி பழனிசாமி

0 21216

1989 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது தாமும் அவையில் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையிலேயே பெண் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது தாக்குதல் நடைபெற்றது என்றார்.

தற்போதைய மூத்த அமைச்சர் ஒருவர்தான் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தார் என்றும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தார் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடக்கவே இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை சொல்வதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அன்றைய தினம் சேலையைப் பிடித்து இழுத்தவர்களுக்கும் முடியைப் பிடித்து இழுத்தவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments