பள்ளியிலேயே சாதி பெயரை சொல்லி மாணவர்கள் மோதும் நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது - அண்ணாமலை

சாதிகள் இல்லையனெ சொல்லித்தர வேண்டிய பள்ளியில் வைத்தே சாதிப்பெயரை சொல்லி மாணவனை திட்டிவிட்டு, அவனை வீடு புகுந்து தாக்கும் நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண், என் மக்கள் யாத்திரையின் 14-வது நாளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அண்ணாமலை பயணத்தை தொடங்கினார். அங்குள்ள மகாகவி பாரதியாரின் மணிமண்டபத்தை பார்வையிட்ட அவர், பாரதி வேடமணிந்த பள்ளி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விளாத்திகுளம் சென்ற அண்ணாமலைக்கு கட்சிக் கொடிகளை ஏந்தியபடி தொண்டர்கள் வரவேற்பளித்தனர். நடைபயணத்தின்போது கடை ஒன்றில் தேநீர் அருந்திய அவர், கடைகாரரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களின் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து அதனை முதலமைச்சர் புரொமோட் செய்யும் வேலையில் தான் ஈடுபட்டு வருவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மறைந்த தனது தாயாரின் இறுதிச்சடங்கில் 3 மணி நேரம் மட்டும் பங்கேற்றுவிட்டு, அன்றைய தினமே வந்தே பாரத் ரயில் சேவை துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments