உக்ரைனில் மக்கள் கடற்கரை செல்ல அனுமதி...ஒடெசா கடற்கரையில் விளையாடியும், குளித்தும் மக்கள் உற்சாகம்

0 1121

உக்ரைன் நாட்டின் மிகப்பெரியத் துறைமுக நகரான ஒடெசாவில், 16 மாதங்களுக்குப் பிறகு மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கடற்படைத் தளம் ஒடெசாவில் அமைந்துள்ளதால், போர் ஆரம்பித்தது முதலே அந்நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கடற்கரைக்குச் செல்லவும், குளிக்கவும் அம்மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான கண்ணி வெடிகளை ரஷ்யப் படைகள் மிதக்க விட்டுள்ளதால், அவை கரை ஒதுங்கிவிடாத வகையில், பாதுகாப்பு வலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments