கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளி குழந்தையை தரக்குறைவாக பேசிய நடத்துநர்.... பேருந்திலிருந்த சகப் பயணிகள் வாக்குவாதம்

கன்னியாகுமரியில், அரசுப்பேருந்தில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தையை தரக்குறைவாக பேசிய நடத்துநரிடம் சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் அந்த குழந்தையுடன் ஆண் ஒருவர் பயணித்துள்ளார்.
வெள்ளிக்கோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டியவரை சற்றுத்தள்ளி இறக்கி விட்டதோடு, இறங்கிச் செல்லும்போது நடத்துநர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை, பேருந்திலிருந்த சகப் பயணிகள் சிலர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் செல்போனில் வீடியோ எடுத்துக்கோ என்னை ஒன்னும் செய்ய முடியாது என அந்த நடத்துநர் தெரிவித்தார்
Comments