பண்ருட்டி அருகே சாமி வீதியுலாவில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்.. !!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாமி வீதியுலாவில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. சாமி வீதி உலாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்களில், சிலைகள் வைக்கப்பட்டு, அவற்றுக்கு முட்டுக்கொடுக்க இரும்புக் கம்பி கட்டப்பட்டிருந்தது.
அந்த கம்பி, அப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பியில் உரசியதில், கோகுல கிருஷ்ணன் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
10-க்கும் மேற்பட்டோர், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments