வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை.. !!

0 927

ஹரியானாவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

நூஹ் மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வன்முறை சம்பவங்களையடுத்து கடந்த 31-ம் தேதி முதல் அங்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் நூஹ் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றும், ஆரம்பபள்ளி மாணவர்கள் சிலரும், சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள மாணவர்களும் பள்ளிக்கு வருகை தந்துள்ளதாகவும், நூஹ் காந்தி பூங்கா அரசு பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments