நெல்சனை தேடும் ரஜினி ரசிகர்கள்.. சொதப்பியதா ஜெயிலர்? கே.ஜி.எப் 2வை தட்டி தூக்கியது

0 20524

ஜெயிலர் படம் கொண்டாட வைத்திருப்பதாகக் கூறிய, ரஜினி ரசிகர்கள் சிலர், படத்தின் இயக்குனர் நெல்சனை தேடி வருவதாக தெரிவித்துள்ள நிலையில், பெங்களூரில் ஜெயிலர் படம் கே.ஜி.எப் 2 படத்தின் முதல் நாள் வசூலை முந்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்க நான் தான் கிங் என்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயிலர் மூலம் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த் என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சென்னையில் சில ரசிகர்கள் , இயக்குனர் நெல்சன் மட்டும் கையில கிடைச்சா முத்தமழை பொழியப்போவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்

பெண்களும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்

தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஜெயிலர் படத்துக்கான வரவேற்பு எகிறியுள்ள நிலையில், ரஜினிக்கு இது மிகப்பெரிய வெற்றிப்படம் என்ற திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் , முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியிலும் , தமிழிலும் சேர்த்து 1073 திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலை வாரிகுவித்து வருவதாக தெரிவித்தார்

ஆந்திரா,கேரளத்திலும் வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர், கர்நாடகத்தில் கே.ஜி.எப் 2 படத்தின் முதல் நாள் வசூலை, தட்டித்தூக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments