சென்னையில் ஓசனிக் எடிபிள் என்ற ஏற்றுமதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...

0 1510

சென்னையில் ஓசனிக் எடிபிள் ((Oceanic Edible)) என்ற தனியார் ஏற்றுமதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனம் கடல்சார் உணவுகள், பழ வகைகள் மற்றும் காய்கறிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ., ஐ.டி.பி.ஐ., எஸ்.பி.ஐ. போன்ற வங்கிகளில் சுமார் 104 கோடி ரூபாய் தொழில் கடன்பெற்ற அந்நிறுவனம், அதனை தொழில் மேம்பாட்டுக்காக பயன்படுத்தாமல் வேறு சில தொழில்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

அந்த கடனுக்கான அசல் மற்றும் வட்டியை அந்நிறுவனம் செலுத்தாமல் வங்கிகளுக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான ஆரோக்கியசாமி டோமினிக் சேவியோ, ஜேம்ஸ் வால்டர், ஜோசப் ராஜ் விமலா ஜோசப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், அந்நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இன்று சோதனை நடத்துகிறது.

சென்னை சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி, தியாகராய நகர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments