தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லைப் போட்டு கொன்ற இளைஞர் கைது..!

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அதிகாலை 3 மணியளவில், திருநகர் காவல் நிலையத்தை தொடர்புகொண்ட மர்மநபர், மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி-களை ஆய்வு செய்தபோது, பிரபல இருசக்கர வாகனத் திருடன் அலெக்ஸ்-தான், மூதாட்டியைக் கொன்றுவிட்டு தங்க காதணிகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
அந்த நேரத்தில் கொலை நடந்த இடத்திற்கு ஒன்றுமே தெரியாததுபோல, வேவு பார்க்கச் சென்ற அலெக்ஸை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போதையில் மூதாட்டியைக் கொன்றதும், மூதாட்டியின் செல்போனில் இருந்தே காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தெரிவித்ததும், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments