மணிப்பூர் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வது வெட்ககரமானது: அமித் ஷா

மணிப்பூர் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வது அவமானகரமானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அவர், ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல் ஆகியவை நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பதே நல்ல பெயராக இருக்க, அதை ஏன் மாற்றினார்கள் என்று தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய அமித் ஷா, 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததால் தான் கூட்டணியில் பெயரை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். போஃபர்ஸ், டூ-ஜி, காமன்வெல்த் போட்டிகள், நிலக்கரி, ஆதர்ஷ், நேஷனல் ஹெரால்டு, டி.எல்.எஃப்., கால்நடைத் தீவனம் போன்ற ஊழல்களை பட்டியலிட்டார்.
பிரச்சினைக்குரிய நேரத்தில் மத்திய அரசுடன் ஒத்துழைக்காவிட்டால் தான் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அரசுடன் ஒத்துழைக்கும் மணிப்பூர் முதலமைச்சரை ஏன் மாற்ற வேண்டும் என்று வினவினார்.
மணிப்பூர் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது தான் என்ற போதிலும், மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வீடியோ சரியாக நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் வெளியானது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
Comments