70 சென்ட்டில் ஆரம்பித்து 100 ஏக்கருக்கு அதிபதியான தி.மு.க. எம்.எல்.ஏ....! விவசாயம் தான் எல்லாமே தந்தது...!
முதலில் 70 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்த தாம் தற்போது 100 ஏக்கருக்கு சொந்தக்காரராக உள்ளதாக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் கூறியுள்ளார். இவை அனைத்தையும் தனக்கு தந்தது விவசாயம் தான் என்றும் தெரிவித்துள்ளார் அந்த தி.மு.க. எம்.எல்.ஏ.
கையில் அரிவாள், மடித்துக் கட்டிய லுங்கி, பச்சைத் துண்டால் தலையில் கட்டிய முண்டாசோடு தென்னந்தோப்பில் வலம் வரும் இவர் தான் தி.மு.க.வைச் சேர்ந்த ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜ்.
தனக்கு விவசாயம் தான் எல்லாம் தந்தது எனக் கூறும் தேவராஜ், ரசாயன உரங்களால் மண்ணின் தன்மையே மாறி விட்டதாகவும், இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனக்கு திருப்பத்தூர் மாவட்டம் செக்குமேட்டில், குடும்பப் பங்காக கிடைத்த 70 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்யத் துவங்கி தற்போது 100 ஏக்கர் வரையில் வைத்திருப்பதாக தெரிவித்தார் எம்.எல்.ஏ தேவராஜ்.
தென்னை மரங்களை மேலாண்மை செய்வது குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் எம்.எல்.ஏ தேவராஜ்.
நம்பிக்கையோடு விவசாயம் செய்தால் விவசாயம் யாரையும் கைவிடாது என நம்பிக்கை தெரிவித்தார் தேவராஜ் எம்.எல்.ஏ.
Comments