பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.. !!

0 4290

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண், தனது பேரனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பெருங்களத்தூரில் துணி, பழங்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

அங்கு கூட்டமாக இருந்ததால், நேற்றிரவு 11 மணியளவில் ரயில் நிலையம் வந்த தமிழ்செல்வி, ஒன்றாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், தமிழ்செல்வி வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வியை, அங்கிருந்த பயணிகள் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்செல்வியை கத்தியால் குத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments