வழக்கறிஞருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை.. 2 பேர் கைது.. 9 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வழக்கறிஞருடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கால்வாய் கிராமத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எதிர் வீட்டுக்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாயாண்டிக்கு ஆதரவாக வழக்கு நடத்தி வந்த வழக்கறிஞர் தேவகண்ணன், என்பவர் எதிர்தரப்பினரிடம் பணம் பெற்றுக்கொண்டு முறையாக வழக்கு நடத்தவில்லை என கூறி அவருடன் மாயாண்டி கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாயாண்டி தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்லாமல் கால்வாய் கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு காவலுக்கு இருந்த 2 போலீசார், கடைக்கு சென்ற மாயாண்டி மகனிடம் தேவகண்ணன் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதை தடுக்க சென்றுள்ளனர். இந்த நேரத்தில் மாயாண்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தடுக்க முயன்ற மாயாண்டியின் மனைவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் தேவகண்ணன் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேரரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments