கஞ்சா குடிக்கிக்கு பூஜை மணியால் அடித்த குருக்கள்.. கருவறைக்குள் புகுந்ததால் ஆத்திரம்..!

0 3810

திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த இளைஞரை, மடக்கிப்பிடித்த குருக்கள் மணியால் தர்மஅடி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவிலில் மணி அடிக்கும் குருக்களை பார்த்திருப்போம்...ஆனால் இவர் கையில் வைத்திருந்த கோவிலில் மணியால் ஆளை அடித்து நொறுக்கினார்.

திருப்பூர் - மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் வந்த மர்ம ஆசாமி ஒருவன் கோவில் கருவறையினுள் சென்று ஒளிந்து கொண்டார்.

கோவிலில் தரிசனத்துக்காக வந்திருந்த பெண்மணி ஒருவர் இதனை கண்டு கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்

உடனடியாக கருவறைக்குள் சென்ற நிர்வாகிகள் அங்கு ஒளிந்திருந்த ஆசாமியை பிடித்து வெளியே இழுத்து வந்த தர்மஅடி கொடுத்தனர்.

அப்போது கஞ்சா குடிக்கி இளைஞனை மடக்கிப்பிடித்த குருக்கள், கையில் வைத்திருந்த மணியால் அடித்து நொறுக்கினார்.

அடிதாங்க வலியால் அலறிய இளைஞர் தன்னை ஒருவன் வெட்ட வருவதாகவும், அதனால் உள்ளே வந்து ஒளிந்து கொண்டதாகவும் கூறிய நிலையில் குருக்கள் அவனை ஏறி மிதித்தார்.

இதனை தொடர்ந்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் வாலிபரின் அந்நபரின் பெயர் கோகுல் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.

நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அருந்தியதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததாக கூறி கோவிலினுள் வந்து ஒளிந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments