டாப் கியரில் போதை பாப்பா.. மரத்தில் செங்குத்தாக நின்ற கார்.. சாலையில் நசுங்கிய பைக்குகள்..!

0 2106

மதுபோதையில் இன்னோவா காரை தாருமாறாக ஓட்டிச்சென்ற பெண் ஏராளமான இரு சக்கரவாகனங்கள் மீது ஏற்றியதோடு, இறுதியாக மரத்தில் ஏற்றி செங்குத்தாக நிறுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

இப்படியும் விபத்து நடக்குமா ? என்பது போல பல பைக்குகளை பந்தாடி .... மரத்தின் மீது காரை ஏற்றி  நிறுத்தி இருக்கும் பரபரப்பான காட்சிகள் தான் இவை..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்னோவா கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக சாலையில் சென்றது. அந்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது இடித்து மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி இடித்து தள்ளி பந்தாடியது

இதில் எட்டு இரு சக்கர வாகனங்கள் காருக்கு அடியில் சிக்கி நசுங்கியது. இறுதியாக சாலையோரம் நின்ற சிறிய அளவிலான மரம் ஒன்றில் மீது ஏற்றி செங்குத்தாக நின்றது

காரின் வேகத்தை கண்டு பதறியடித்து ஓடியவர்கள் தங்கள் வாகனங்கள் சேதமடைந்த ஆத்திரத்தில் சாலையில் மரத்தில் ஏறி நின்ற காரின் கதவை திறந்து பார்த்தனர்.

காருக்குள் மித மிஞ்சிய போதையில் பெண் ஒருவர் அமர்ந்து இருப்பது தெரியவந்தது. அந்தரத்தில் நின்ற காரில் இருந்து அந்தப்பெண்ணை கீழே இறக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அருகில் உள்ள பாரில் மது அருந்தி விட்டு காரை வீட்டுக்கு ஓட்டிச்சென்றதாகவும், வழியில் போதை தலைக்கேறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. அந்தப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments