கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம்

0 1054

தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தேனி பங்களா மேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது தொண்டர்களுடன் இணைந்து பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியபோது, டிடிவி தினகரனை சார் என்று குறிப்பிட்டு பேசிய ஓபிஎஸ், கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்களை திமுக அரசு அடையாளம் காட்ட வேண்டும் என்றார்.

போராட்டத்தின்போது பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடனான வருத்தங்களை எல்லாம் விட்டுவிட்டு, ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், ராமநாதாபுரம், தூத்துக்குடி, வேலூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில், ஓபிஎஸ் தரப்பினரோடு, அமமுகவினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments