போர் உச்சம் பெறுவதால் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பீதி நிலவுகிறது... ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை...!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரம் அடைந்ததால், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பீதி நிலவுகிறது.
எந்த நேரத்திலும் ரஷ்ய போர் விமானங்கள் தாக்குல் நடத்தும் அச்சம் இருப்பதால், இரவு நேரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க, கீவ் நகர மக்களை உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது. கீவ் நகரில்,தாக்குதல் தொடர்பான அபாய சப்தம் எழுப்பி மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யாவும் கூறியுள்ளது.
Comments