ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யபட்ட சம்பவம் - தவறான உறவை அக்கா கண்டித்ததால் தங்கையே காதலனோடு சேர்ந்து கொலை செய்தது அம்பலம்....!

0 6548

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த பெண்ணின் தங்கை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனம்பாக்கம் MGR நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (எ) ராஜேஷ்வரி. இவர் ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில் கடந்த 19 ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை தொடர்பாக ராஜேஷ்வரியின் தங்கை நாகவள்ளி, உறவினர் ஜெகதீசன் உள்பட 5 பேரை தாம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

சக்திவேல் உன்ற இளைஞருடன் தான் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை அக்கா கண்டித்து வந்ததால், சொந்த தங்கையே காதலனோடு சேர்ந்து கொலை செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்கு கணவர்கள் இருந்த ராஜஷ்வரி, ஐந்தாவதாக ஒருவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் தனக்கு அட்வைஸ் செய்ததால் நாகவள்ளி வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments