தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
கனடாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை எதிரொலி... சாலைகளில் வெள்ளம் சீறிப் பாய்வதால் போக்குவரத்து பாதிப்பு
கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளம் சீறிப் பாய்ந்து செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சில பகுதிகளில் சுமார் 20சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.
மேலும் கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள அணை உடையும் வாய்ப்பிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
Comments