அரை நிர்வாணமாக்கி அடித்து சித்தரவதை வன்கொடுமை வழக்கு இல்லை..! இது தான் காரணமாம்

0 4007

ராஜபாளையம் அருகே கண்மாயில் மீன்பிடித்தவர்களை அரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தான் குத்தகைக்கு எடுத்த கண்மாய்க்குள் இறங்கி ராஜபாளையம் 10 வது வார்டு பகுதியில் வசிக்கும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் மீன்பிடித்ததால் ஆத்திரம் அடைந்த சுந்தரராஜபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் கும்பல் தாக்குதல் நடத்திய கொடுமையான காட்சிகள் தான் இவை..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியா ரோடு பகுதியில் அமைந்துள்ளது மருங்கூர் கண்மாயை சுந்தர்ராஜ புரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்பிடித்து வந்ததாகவும், குத்தகை காலம் முடிந்ததால் வேறு சிலர் தற்போது மீன்பிடித்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை ராஜபாளையம் 10 வது வார்டுக்குட்பட்ட சோமையாபுரம் மனோகரன், அன்பழகன் , சூர்யா உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் மீன்பிடித்ததாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுந்தரராஜபுரம் ராஜ்குமார் தலைமையிலான 15 பேர் கும்பல் மீன்பிடித்த இளைஞர்களை அரை நிர்வாணமாக பிடித்து கைகளை கட்டி கட்டையால் தாக்கி கதறவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தை ராஜ்குமார் ஆதரவாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து தாங்கள் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நபர்களை தாக்கியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் இந்த கொடுமையான தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அரை நிர்வாண தாக்குதல் நடத்திய ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர், தலைமறைவான 10 பேரை தேடிவருகின்றனர்.

தாக்கிய மற்றும் தாக்குதலுக்குள்ளான இருவரும் வேறு வேறு சாதியாக இருந்தாலும், இரு தரப்பினரும் பட்டியலினத்தில் உள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சாதிய வன்கொடுமை வழக்குப் பதிய இயலவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

1000 ரூபாய் கூட மதிப்பில்லாத மீன்களை பிடித்ததற்காக நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments