சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.. !!

திண்டுக்கல் அண்ணா நகரில் பிரபல ரவுடி பட்டறை சரவணன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த சரவணன் என்பவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் அண்ணாநகர் தைலத் தோப்பில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை சரவணனை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
Comments