அமெரிக்காவின் H1-B விசா வைத்திருப்பவர்கள் கனடாவில் பணி செய்ய அனுமதிக்கும் புதிய திட்டம்.. !!

அமெரிக்காவின் H1-B விசா வைத்திருக்கும் 10 ஆயிரம் பேர் 3 ஆண்டுகள் கனடாவில் பணி செய்ய அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பால் அமெரிக்காவில் வசிக்கும் 75 சதவிகித இந்தியர்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவிலிருந்து H1-B விசா வைத்திருப்பவர்களுக்கு திறந்த பணி அனுமதிகளை கனடா வழங்கத் தொடங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டில் படிக்க அல்லது வேலை வாய்ப்புகளை தேடவும் புதிய திட்டம் அனுமதிக்கிறது.
இந்த திட்டம் ஓர் ஆண்டு அல்லது 10 ஆயிரம் விசா விண்ணப்பங்கள் பெறும் வரையில் நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவர்களுக்கு கனடா நிறுவனங்களில் பணி வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Comments