அந்த 27 நாட்கள்.. புழலுக்கு சென்றார் செந்தில் பாலாஜி..! அங்கேயும் சிகிச்சை தான்..!

0 3049

10 நாட்கள் மட்டுமே அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருக்க முடியும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில் , அறுவை சிகிச்ச்சை முடிந்து 27 நாட்கள் கழித்து காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி புழல் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடந்த மாதம் 21 ந்தேதி இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறி காவேரி மருத்துவமனையில் பைப்பாஸ் அறுவைசிகிச்சை நடந்தது. அதன் பின்னர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார் செந்தில்பாலாஜி

இந்த நிலையில் 27 நாட்களுக்கு பின்னர் திங்கட்கிழமை மாலை காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி ஆம்புலன்ஸ் மூலமாக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செந்தில்பாலாஜிக்கு மேலும் சில தினங்கள் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதால், புழல் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்காண சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை முடிந்ததும் விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி வருகின்ற ஜூலை 26ந்தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரணை கைதியாக உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments