குடிபோதையில் பணிக்கு வந்ததால் பணிநீக்கம்... மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தற்காலிக தூய்மைப் பணியாளர் நடுரோட்டில் ரகளை

குடிபோதையில் பணிக்கு வந்ததால் பணிநீக்கம்... மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தற்காலிக தூய்மைப் பணியாளர் நடுரோட்டில் ரகளை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போதையில் இருந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர் தனக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அதீத போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர் மாதேஸ் இவர் கடந்த இரண்டு தினங்கள் முன்பு குடிபோதையில் பணிக்கு வந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி எடப்பாடி செல்லும் சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். மேலும் பள்ளி வாகனம் முன் படுத்துக் கொண்டு தொடர் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
Comments