"என் மண் என் மக்கள்" நடை பயணத்தில் பங்கேற்க 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக சார்பில் நடைபெறும் நடை பயணத்தில் பங்கேற்க ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்து இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மண் என் மக்கள் நடைபயணத்தை வருகிற 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பதாக தெரிவித்தார்.
இந்த நடைபயணத்தில் பொதுமக்களும் தம்மோடு சேர்ந்து நடக்க வேண்டும் என ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் கூறினார்.
Comments