2 ஆண்டுகள் வரையில் காய்க்கும் கத்திரி செடி... குறைந்த தண்ணீர் செலவு, அதிக லாபம்.... நவீன முறையில் விவசாயம்...!

0 12924

6 மாத பயிரான கத்திரி செடியை 2 ஆண்டுகளுக்கும் மேலாக பலன் தரும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி நவீன முறையில் பயிரிட்டு வருகிறார்.

தடப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் இஸ்ரேல் நாட்டின் ராப்டர் முறைப்படி கத்திரி, தக்காளி நாற்றுகளை நட்டு விவசாயம் செய்து வருகிறார்.

சுண்டைக்காய் செடியின் தண்டுப்பகுதியோடு ஒட்டு போடப்பட்ட கத்திரி நாற்றை நட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ள சீனிவாசன், இந்த வகை நாற்றுகளை ஆந்திராவின் குப்பத்திலிருந்து வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

சுண்டைக்காய் செடியின் ஆயுட்காலம் 2 முதல் 3 ஆண்டுகள் வரையில் என்பதால் அந்த காலம் வரையில் அந்த செடியில் கத்திரி காய்த்து வரும் என கூறிய சீனிவாசன் இந்த முறையால் குறைந்த தண்ணீரே செலவாவதுடன் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments