வீட்டின் குடிநீர் தேவைக்காக கிணறு தோண்ட முடிவு செய்த குழந்தைகள்... தந்தையின் வழிகாட்டுதல்படி 34 அடி ஆழ கிணறு உருவாக்கம்...!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார் காடு பகுதியை சேர்ந்த சிறுமியும், சிறுவனும் தங்களது வீட்டிற்காக குடும்பத்தினர் உதவியுடன் 34 அடி ஆழ கிணறு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கட்டுமான தொழிலாளியான பாபுராஜ் என்பவரது வீட்டில் குடிநீர் தட்டுப்பாடு எற்பட்டதால், அவரின் குழந்தைகளான சிவன்யாவும், சிவஜீத்தும் தங்கள் முயற்சியில் கிணற்றை உருவாக்க முடிவு செய்தனர்.
அதற்கு பாபுராஜூம், அவரது மனைவியும் ஒத்துழைக்க உறுதி அளித்ததையடுத்து, கிணற்றை தோண்டும் பணி தொடங்கியது. தந்தையின் வழிகாட்டுதல் படி சிவன்யாவும், சிவஜீத்தும் பணியை செய்தனர்.
30 அடி ஆழம்வரை தோண்டியபோது பாறைகள் காணப்பட்டதால், வாடகைக்கு எந்திரம் வாங்கி அவை உடைக்கப்பட்டு, தொடர்ந்து ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து 34-வது அடியில் குடிநீர் கிடைக்க தொடங்கியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments