பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு.. அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்...

0 1240

2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 6 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு பாரீஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே (Elisabeth Borne) வரவேற்றார்.

பேண்ட் வாத்தியங்கள் முழங்க பிரதமருக்கு சிகப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பிரான்ஸ் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

பாரீஸ் நகரில் தாம் தங்கும் ஹோட்டலுக்கு வெளியே குவிந்த இந்திய வம்சாவளியினரை சந்தித்த பிரதமர் மோடி, சிறுவர்களுடன் கைக்குலுக்கி மகிழ்ந்தார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் நாளை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழு திட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதிபர் இமானுவேல் மேக்ரான் முன்னிலையில் 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தம் பிரதமர் முன்னிலையில் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments