சந்திரயான்- 3 விண்கல மாதிரியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..!!

சந்திரயான்- 3 விண்கல மாதிரியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிலிருந்து எல்.வி.எம்.-3 ஏவூர்த்தி மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதற்கான இருபத்தி ஐந்தரை மணி நேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், சந்திரயான்- 3 விண்கலத்தின் சிறிய மாதிரியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையானை இன்று காலை தரிசனம் செய்தனர்.
Comments