குடிநீர் கேட்டு வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்.. ஒருமணி நேரத்தில் கனிமொழி எம்பி நடவடிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிராம ஊராட்சியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒருமணி நேரத்தில் டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்க திமுக எம்பி கனிமொழி நடவடிக்கை எடுத்தார்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இங்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரும் 17-ந்தேதி சீராக குடிநீர் விநியோகம் வலியுறுத்தி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கழுகுமலையில் நிகழ்ச்சிக்கு சென்ற கனிமொழி எம்.பி. வாகனத்தினை வானரமுட்டி பகுதி பெண்கள் வழிமறித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கனிமொழி எம்.பி. தற்காலிக ஏற்பாடாக டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
Comments