லேண்டிங் கியர் பழுதால் ஓடுதளத்தில் சறுக்கிக் கொண்டே சுவற்றில் மோதி இரண்டாக உடைந்த விமானம்..!!

0 2617

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி இரண்டாக உடைந்தது.

அந்நாட்டின் தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றது. அப்போது விமானத்தின் லேண்டிங் கியர் எனப்படும் தரையிறங்கும் கருவி பழுதானதால் ஓடுதளத்தில் சறுக்கிக் கொண்டே சென்றது.

விமானத்தைக் கட்டுப்படுத்தும் விமானியின் செயல்கள் தோல்வியில் முடிந்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நொறுங்கியது. இதில் விமானி அமரும் காக்பிட் பகுதி இரண்டாக உடைந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 30 பயணிகளும் 4 ஊழியர்களும் பயணித்த நிலையில் இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments