மாணவி ஸ்ரீமதி நினைவு தினம்...பெரியநெசலூரில் மணிமண்டபம் திறப்பு..!!
மாணவி ஸ்ரீமதி நினைவு மணிமண்டபம் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் அவரது உறவினர்களால் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்தாண்டு மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.
இது தொடர்பான வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வரும் நிலையில் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபம் திறக்கப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தனது மகளின் இறப்பிற்கு உரிய நீதி இதுவரையில் கிடைக்கவில்லை எனவும், இதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவரது தாயார் செல்வி கூறினார்.
Comments