திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளுக்கான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஒப்புதல்

ஆன்லைன் விளையாட்டு, குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அனைத்து மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு பேசிய நிர்மலா சீதாராமன், புற்றுநோய்க்கான மருந்து மற்றும் சிறப்பு மருத்துவ தேவைக்கான உணவுகள் இறக்குமதிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார். திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விதிக்கப்படும் வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
சமைக்காமல் மற்றும் வறுக்காமல் பாக்கெட் செய்து விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கான வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என்றார்.
பேன்ஸி புடவை நெய்யும் நூல்கள் மீதான வரி, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலாசீதாராமன் கூறினார்.
Comments