வாரிசு சான்றிதழ் வழங்க பெண் கூலி தொழிலாளியிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர் அலுவலக உதவியாளர்...!

வாரிசு சான்றிதழ் வழங்க, சென்னை தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பெண் கூலித் தொழிலாளியிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக வீடியோ ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி லட்சுமி. இவரது மாமனார் இறந்துவிட்ட நிலையில், தனது கணவருக்கு வாரிசு சான்றிதழ் பெற வட்டாட்சியர் அலுவலகத்தில், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
வெகு நாட்கள் ஆகியும் சான்றிதழ் கிடைக்காததால், நேரில் சென்று விசாரித்த போது, அலுவலக உதவியாளர், தாசில்தாருக்கு பணம் கொடுக்க வேண்டுமெனக் கூறி 30 ஆயிரம் ரூபாய் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
தங்களால் 15 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் எனக் கூறிய லட்சுமி, தனது நகையை அடகு வைத்து பணத்தை கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்ட அலுவலக உதவியாளர், சான்றிதழ் கிடைத்துவிடும் எனக் கூறியதை லட்சுமியுடன் சென்ற நபர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
Comments