நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 5 மெக்சிகோ நாட்டினர் உட்பட 6 பேர் பலி..!

0 1465

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 மெக்சிகோ நாட்டினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் காத்மண்டுவில் இருந்து இன்று காலை சொலுகும்பு என்ற பகுதிக்கு மனங்க் ஏர் நிறுவனத்தின் அந்த ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. காலை 9.45 மணியளத்தில் புறப்பட்ட ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில் ரேடாருடனான தொடர்பை இழந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து நடந்த தேடுதல் பணியின்போது லம்ஜுரா என்ற கிராமத்தில் ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மலை உச்சியில் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து நேபாள அரசு விசாரணை குழு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments