என்னை விட்டுடுங்கப்பா.. நீங்க ரெண்டு பேரும் நல்லாருங்க... கணவரின் தரமான சம்பவம் ..!
வேறு ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்த மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர் ஒருவர், இருவரையும் அருகில் உள்ள கோவிலுக்குக் கூட்டிச் சென்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆண் நண்பருடன் கையும் களவுமாக சிக்கிய மனைவியை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கணவர் திருமணம் செய்து வைத்து சம்பவம் நிகழ்ந்திருப்பது, பீகார் மாநிலம் நவடா மாவட்டத்தில்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், காயங்களுடன் இளைஞர் ஒருவர் சிவன் கோவிலில் பெண் ஒருவரை தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். அருகில் பெண்ணின் கணவரும் உள்ளார். அந்த இளைஞருக்கு முகம், கை, கால்களில் காயம் காணப்படுகிறது. காயத்துடனேயே அந்த இளைஞன் பெண்ணுக்குக் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
இவர்களை பலரும் மொபைலில் வீடியோ எடுக்க, அந்த பெண் கேமராவில் முகத்தைக் காட்டாமல் அழுகிறார். கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், அந்த பெண் இரவில் தனது ஆண் நண்பரை வீட்டிற்கு வரவழைப்பதை வாடிக்கையாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று அக்கம் பக்கத்தினர் இவர்களை வசமாகப் பிடித்து இருவரையும் சரமாரியாகத் தாக்கி அங்கேயே இருவரையும் பிடித்து வைத்துள்ளனர். பின்னர் கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வெளியூர் சென்றிருந்த கணவர் வீடு திரும்பியதும், இருவரையும் அழைத்துச்சென்று கோவிலில் வைத்து தம்பதிகளாக மாற்றி விட்டு, அவர்கள் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments