அண்ணன்... ஜாங்கிரி ஊட்டுற ஸ்டைலே அவர் யார்ன்னு சொல்லும்..! திமுக எம்.எல்.ஏ வால் கலகலப்பு..!

0 2070

சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நடந்த சாலை மற்றும் மழை நீர் வடிகால் பணிக்கான பூமி பூஜையில் ஆண் தொண்டர்களுக்கு கையில் ஜாங்கிரி வழங்கிய திமுக எம்.எல்.ஏ , பெண் தொண்டர் ஒருவருக்கு வலுக்காட்டாயமாக வாயில் ஜாங்கிரி ஊட்டிய சம்பவத்தால் கலகலப்பு உண்டானது...

ஆண் தொண்டர்களுக்கு கையில் ஜாங்கிரியை கொடுத்த பூந்தமல்லி திமுக எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி , மகளிரணியை சேர்ந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக வாயில் ஜாங்கிரி ஊட்டிய கலகலப்பான காட்சிகள் தான் இவை..!

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் 3 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் பணிக்கான தொடக்க நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து தீபாரதனை காண்பித்து பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகளில் ஆண்களுக்கு ஜாங்கிரியை கையில் எடுத்து கொடுத்த எம்.எல்.ஏ, நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரே ஒரு மகளிரணி நிர்வாகியை உற்சாகப்படுத்தும் விதமாக ஜாங்கிரியை அவரே வாயில் ஊட்ட முயன்றார்...

ஆனால் வெட்கப்பட்ட அந்த மூத்த பெண் தொண்டரோ , வாயில் வேண்டாம் கையில் கொடுத்து விடுங்கள் என்று கூற, விடாப்பிடியாக வாயில் ஊட்டியே தீருவேன் என்று எம்.எல்.ஏ அடம்பிடித்தார்...

உடன் இருந்தவர்கள் பரவாயில்லை வாயில் வாங்கிக்கம்மா என்று கோரசாக எடுத்துச்சொன்னதால்... அந்த பெண்ணும் வேறு வழியின்றி வெட்கத்துடன் ஜாங்கிரியை வாயில் வாங்கிக் கொண்டார். இந்த கலகல கலாட்டாவால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments