தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
கேரளாவில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
கேரளாவில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
தொடர் கனமழையால், சுற்றுலாத்தலமான பைதல்மலை அருகே வனப்பகுதியில், பேரிரைச்சலுடன் வெள்ளம் பாய்கிறது.
இடுக்கி மாவட்டம் கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்து வரும்நிலையில், மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருப்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பம்பா மற்றும் மணிமாலா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments