5,000 கார்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து - உள்ளே சிக்கிக்கொண்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலி

0 1151

அமெரிக்காவில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்றபோது உள்ளே சிக்கிக்கொண்ட தீயணைப்பு வீரர்கள் 2 பேர் வெளியே வர முடியாமல் உயிரிழந்தனர்.

ஐயாயிரம் கார்கள் ஏற்றப்பட்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நெவார்க் நகர துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவு ஒன்பதரை மணியளவில் கப்பலின் 11 மற்றும் 12-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

கப்பலுக்குள் சென்று நெருப்பை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் தீ வேகமாகப் பரவியதால் பின்வாங்கினர். அப்போது வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments