"நான் என்ன பாவம் பண்ணேன்...ஏன் இப்டி டார்கெட் பண்றீங்க...'' கார் விபத்து தொடர்பாக விளக்கம் வெளியிட்ட டிடிஎஃப் வாசன்...!

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் விபத்துக்குள்ளான காரை தான் ஓட்டவில்லை என்று யூடியூபர் டிடிஎஃப் வாசன் கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள விளக்க வீடியோவில், தனது மஞ்சள்வீரன் படத்தை இயக்கும் இயக்குநர் செந்தில் செல்அம் பட வேலைகள் தொடர்பாக உறங்காமல் அலைந்து கொண்டிருந்ததால், கார் ஓட்டிய போது கண் அயர்ந்து விபத்து நேரிட்டதாக தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த நபரை தானே ஆட்டோவில் மருத்துவமனையில் சேர்க்க அழைத்து சென்றதாக கூறிய அவர், விபத்து ஏற்பட்டதும் தான் தப்பி ஓடவில்லை என்றும் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் தன்னை டார்கெட் செய்யும் வகையில் செய்திகள் வெளியாவது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments