நவரே கடற்கரையில் மக்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு சுறா வந்ததால் பரபரப்பு..!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நவரே கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதிக்கு சுறா மீன் வந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுறாவின் துடுப்பு பகுதி மற்றும் வால் பகுதி தண்ணீருக்கு மேல் தெரிந்ததை பார்த்த மக்கள் அச்சமடைந்து வேகமாக கரைக்கு திரும்பினர்.
அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதத்தில் 16 சுறா மீன் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் ஃப்ளோரிடாவில் மட்டும் 9 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments