அந்தம்மா சாமி சார்.. வீடுதேடி வந்து உதவி.... முகம் காட்டாத மகாலட்சுமி..!

0 3839
அந்தம்மா சாமி சார்.. வீடுதேடி வந்து உதவி.... முகம் காட்டாத மகாலட்சுமி..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள 12ஆம் வகுப்பு மாணவியின் நிலை கண்டு மனமிரங்கிய பெண் ஒருவர் அவரது வீடுதேடிச்சென்று உதவியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தூம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான காமாட்சி தனது மாற்றுத்திறனாளி தாய் மற்றும் சகோதரரை படித்துக் கொண்டே வேலைக்கு சென்று காப்பாற்றிவரும் நிலையில் மேல் படிப்புக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்

மாவட்ட நிர்வாகம் பாராமுகத்துடன் இருந்தாலும், அந்த மாணவியின் நிலை கண்டு மனமிறங்கிய ஊர் பெயர் சொல்ல மறுத்துவிட்ட மகாலெட்சுமி ஒருவர் மாணவி காமாட்சியின் வீடுதேடிச்சென்று, முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியதோடு, மாணவியின் வங்கி கணக்கு எண்ணையும் வாங்கிச்சென்றுள்ளார்.

எட்டணாவுக்கு உதவி செய்து விட்டு எட்டு ஊருக்கு படம் போட்டு விளம்பரம் தேடிக் கொள்ளும் மனிதர்கள் மத்தியில், அந்த மாணவியின் படிப்புக்கு உதவிய அந்தப் பெண்மணியோ தனது முகத்தை வெளியில் காண்பிக்க வேண்டாம் என்று கூறிச்சென்றதாக சொல்லப்படுகின்றது. அந்த அம்மா... தனக்கும் குடும்பத்துக்கும் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வதாக கூறிச்சென்றிருப்பதாக மாணவி காமாட்சி உருக்கமாக நன்றி தெரிவித்தார்

பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றிய கடவுள் எப்படி இருக்கும் என்று உங்கள் உள்ளங்கள் நம்புகின்றதோ அந்த உருவம் தான் , வீடுதேடிச்சென்று உதவிய பெண்மணியின் உருவம் ..! என்கின்றனர் மாணவியின் குடும்பத்தினர். தந்தை தவிக்கவிட்டு சென்று விட்டாலும், தாயையும், சகோதரனையும் அரவணைத்து காப்பாற்றும் மாணவி காமாட்சிக்கு மாவட்ட நிர்வாகமும் தக்க உதவி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments