பிலடெல்பியா நகரில் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி.. கண்மூடித்தனமாக சுட்ட 40 வயது நபர் கைது..!

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் 40 வயது நபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு எட்டரை மணியளவில் செஸ்டர் அவென்யு பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுடுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குண்டு துளைக்காத கவச உடை அணிந்தபடி சுட்டுக்கொண்டிருந்தவனை கைது செய்தனர். அவனை நோக்கி உரிமம் பெறாத துப்பாக்கியால் சுட்ட பாதசாரி ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
2 வயது குழந்தையும், 13 வயது சிறுவனும் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவனுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments