செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேள்விக்கு ஆள விடுங்கப்பா என அமைச்சர் பதில்!

மேட்டூர் அணை தண்ணீர், காவிரி பாசனத்தின் கடைமடை வரை சென்றுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதை மறுத்தார்.
கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டுக்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறிய துரைமுருகன், ஆனால் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கி இருப்பதாகவும் இதனால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நீர் திறந்துவிடாததால் காவரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் கர்நாடகாவை வலியுறுத்தவே தாம் டெல்லி செல்வதாகவும் அவர் கூறினார். செந்தில்பாலாஜி வழக்கு குறித்த கேள்விக்கு, ஆள விடுங்கப்பா என்றார் துரைமுருகன்.
Comments